தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே இப்படியா?... முதல் நபராக சீமான் மீது பாய்ந்தது வழக்கு... நாதக தலையில் இறங்கியது இடி...!
அந்தியூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு பதிவு.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனாக அமலாகியுள்ளது.
குறிப்பாக அரசியக் கட்சிகளுக்கு கூட்டங்களை நடத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் ஒருவேளை தடை இருந்தால், அந்த தடையில் இருந்து விலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
இதனிடையே, நேற்று மாலையே தமிழக தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது, இந்த நிலையில்
இதையும் படிங்க: கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து உரிய அனுமதி பெற்று கூட்டம் நடத்தி இருக்க வேண்டும், ஆனால் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடைத்தியதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆலங்காட்டூர் ஆனந்தி மீது அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் தேர்தல் நடத்தை விதிவு முறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குற்ற சமூகமாக மாறிவிட்டோம்... யாருக்கும் பாதுகாப்பில்ல... சீமான் ஆதங்கம்..!!