புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!
தமிழகம் முழுவதும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நேற்று இந்த அறிவிப்பானது தலைமை தேர்தல் ஆணையம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மாலை முதலே மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கிஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்ன பெல்லாரம்பள்ளி கூட்டு ரோடு சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த சதீஷ் குமார் என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1, 08,400 ரூபாயயை இருப்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்து பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேசிடம் ஒப்படைத்தனர்.
ஓசூர் அருகே நேற்று மாலை மத்திகிரி பேருந்து நிலையம் அருகே மஞ்சுநாத் என்பவர் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 93 ஆயிரம் ரூபாயை தேர்தல் நடக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இன்று காலை முதல் தமிழக - கர்நாடகா மாநில எல்லைக்குட்பட்ட கக்கனூர், ஜூஜூவாடி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ஒட்டப்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(39) என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்று 5 இலட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: எங்கும் கஞ்சா...65 வயது மூதாட்டி மீது பாலியல் தாக்குதல்..! அண்ணாமலை கண்டனம்..!!
கோலார் மாவட்டம் சீனிவாசபுரத்தில் இருந்து சவுடா ரெட்டி என்பவர் கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதிக்கு ஓசூர் வழியாக ஆவணம் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் எடுத்துச் சென்ற பொழுது, பாகலூர் சாலை சம்பங்கிரி எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்தனர்.
தற்போது வரை ஒசூரில் மட்டும் 11 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளபட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது, உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரசேகர் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் ஆடு வியாபாரி சேவுகமூர்த்தி என்பவரிடமிருந்து 71 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலூரில் கிரானைட் அதிபர் பெரியசாமி என்பவரிடம் 1.34 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் ஒப்படைக்கப்பட்டது.
இன்று காலை கேரளாவைச் சேர்ந்த குமாரி என்பவரிடம் 2.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 8 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாணாவரம் மேம்பாலம் மீது தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக காரில் வந்த தரணிதரன்(33) என்பவரிடமிருந்து உரிய ஆவணம் இல்லாத மாதிரி கொண்டுவரப்பட்ட 95 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அவிநாசி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அன்னூர் அருகே சோமனூர் சாலையில் மேற்கொண்ட சோதனையில் காரில் கொண்டு வந்த பதிநான்கு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுராந்தகம் அருகே நேத்தப்பாக்கம் என்ற இடத்தில் சித்தாமூரிலிருந்து சென்னை நோக்கி வந்த காரில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 15 லட்சம் பணமும், உடுமலை சாலை சித்தம்பலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: விறுவிறுப்பான தேர்தல் களம்... முதல்வர் தலைமையில் திமுக மா. செ கூட்டம்..!! முக்கிய விவாதம்..!!