வாக்குப்பதிவு நடக்கும் இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..! தேர்தல் ஆணையம் திட்டம்
தமிழ்நாடு தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நியாயமாக நடைபெற ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று நாள் அரசு மதுபான கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 கோடி ரூபாய்க்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் படிவம் 12டி பயன்படுத்தி க்கால தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கான 1.5 லட்சம் பேர் வாக்களிக்க விண்ணப்பத்துள்ளனர். 3. 40 லட்சம் அலுவலர்கள் தபால் ஓட்டுக்கு தகுதி உள்ளவர்கள். அடுத்தடுத்த கட்டங்களில் பயிற்சியின் போது அந்த மையங்களிலேயே படிவம் வழங்கப்பட்டு, அந்த மையத்திலேயே தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் வாக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சியில் உள்ள பொது மையத்திற்கு பிரித்து மூடி முத்திரையிட்ட கவரில் அனுப்பப்படும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026க்கு 1032 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதி இதுவரை கேட்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 20,757 பேரிடம் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் உள்ளது. இதில் 3000 தவிர்த்து மற்ற அனைத்து துப்பாக்கிகளும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை தேடப்படும் குற்றவாளிகளில் 2650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: உள்துறைச் செயலாளர் மாற்றம்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்..!!
தமிழகத்தில் மொத்தம் 75032 வாக்கு சாவடிகள் இருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 75064 உயர்ந்து உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 5938 உள்ளது. 75100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிக அளவு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்று அறியும் கருவி தயார் நிலையில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்த ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல்வேறு உத்திகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்..!! உத்தரவை எதிர்த்து டி.ஆர்.பாலு கடிதம்..!!