ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வந்தனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிந்தது.
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வந்தது. பல தொகுதிகளில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பங்கேற்று வந்தனர்.
அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மாலை 6:00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஸ்டார் ரூம்களில் வைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட்..! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம்..!
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கின. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17C-யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன், மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விபரங்கள் ஒப்பீடு செய்து சரிபார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு..! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!