தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி-க்கள் அதிரடி மாற்றம்!
காஞ்சிபுரம், பெரம்பலூர், தஞ்சை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்குப் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை நடுநிலையோடும் பாதுகாப்புடனும் மேற்கொள்வதற்காகத் தமிழகத்தில் 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை (SP) அதிரடியாக மாற்றம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காகவும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிகாரிகள் விபரம்
காஞ்சிபுரம் மாவட்டம்: புதிய எஸ்.பி-யாக ஜவஹர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம்: புதிய எஸ்.பி-யாக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம்: புதிய எஸ்.பி-யாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம்: புதிய எஸ்.பி-யாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மதுரவாயல் போன்ற இடங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய நியமனங்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் மற்றும் பறக்கும் படைகளின் சோதனைகள் மேலும் முடுக்கிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: ஏப்ரல் 23 பொதுவிடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பணப் பட்டுவாடாவைத் தடுக்கவும் இத்தகைய அதிகாரமிக்க மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!