மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேலும் 12 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது பலருக்கும் நிம்மதியைத் தரும் ஒன்றாக இருக்கிறது. காரணம், இந்த ஆண்டு சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெரிய அளவிலான பணி நடந்து வருகிறது. இதன் கீழ் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19, 2025 அன்று வெளியிடப்பட்டது.
அதில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது போன்ற கோரிக்கைகளை சமர்ப்பிக்க ஜனவரி 18, 2026 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.ஆனால் பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறை, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது போன்ற காரணங்களால் பலரால் இந்தக் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது.
சில அரசியல் கட்சிகள், குறிப்பாக சிபிஎம் போன்றவை, குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதையடுத்து தேர்தல் ஆணையம் கேரளா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் claims மற்றும் objections சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்துள்ளது.இதனால், இப்போது ஜனவரி 30 வரை வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம், தவறான விவரங்களைத் திருத்தலாம் அல்லது தேவையில்லாத பெயர்களை நீக்கக் கோரலாம்.
இதையும் படிங்க: வரைவு வாக்காளர் பட்டியல்... பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் தகவல்...!
குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், புதிதாக தகுதி பெற்றவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் 2026-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தவிர்ப்பதற்காக கால அவகாசத்தை மேலும் 12 நாட்களுக்கு தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
இதையும் படிங்க: SIR... பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள் வந்திருக்கு... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...!