60 பெட்டிகளில் கட்டு கட்டாய் பணம்... 7,90,380 ரூபாயை கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!
நெல்லையில் முறையான ஆவணங்களின்றி 60 பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட 7,90,380 ரூபாய் மதிப்பிலான ஷூ செருப்புகளை பறிமுதல் செய்த பறக்கும் படை
சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் மற்றும் பொருள்களை தற்போது எடுத்துச் சொல்ல முடிவதில்லை.
மேலும் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்திலும் 30-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பறக்கும் படை எண் 3 பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட நெல்லை ஜங்ஷன் பகுதியில் சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி ராமையன்பட்டி பகுதியில் இருந்த குடோனில் இருந்து சுமார் ரூ.7,90,380 மதிப்பிலான 60 பெட்டிகளில் ஷூ மட்டும் செருப்புகள் மினி லாரியில் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: “மனித உயிருக்கு ஆபத்து...” - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது வழக்கு - பரபரப்பு காரணம்...!
இதைப் பார்த்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்பொழுது முறையான ஆவணங்களின்றி ஷூ மற்றும் செருப்புகளை ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு வருவதற்காக அதன் ஊழியர்கள் எடுத்து வந்துள்ளனர்.
தற்பொழுது தேர்தல் நடத்த விதிகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை தாசில்தார் இசக்கி பாண்டியிடம் ஒப்படைத்தனர்.
முறையான ஆவணங்களை காண்பித்து பொருள்களை பெற்றுக் கொள்ளுமாறு அவர் உரியவர்களிடம் அறிவுறுத்தினார். அதன் பின்னர் ஷூ மற்றும் செருப்புகள் அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிரடி காட்டிய பறக்கும் படை... சென்னையில் ரூ.77 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்...!