×
 

விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தலைமை தேர்தல் அதிகாரிகள் தமிழகம் வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-இல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை மிகவும் சீராகவும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எஸ் ஐ ஆர் பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழ்நிலையில் பணிகள் மும்முறமாக நடந்து வருகின்றன.

தேர்தலை எவ்வித இடையூறும் இன்று நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் சென்னையில் முக்கியமான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நிறுவனத்தால் அனைத்து கட்சிகளுடனும் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரும் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தக் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடைமுறைகளை முழுமையாக விவாதிப்பதற்காக இந்த இரு நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்..! திருச்சி, தஞ்சையில் பிரதமர் மோடி பரப்புரை..!

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்ட ஒழுங்கு பிரச்னைகளைத் தவிர்ப்பது, பணப்பட்டுவாடா தடுப்பு நடவடிக்கைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பராமரிப்பு, பரவலாக உள்ள பிரச்சார விதிமுறைகள் போன்ற பல முக்கிய அம்சங்கள் இதில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: வரும் 22 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு..! திமுக தலைமை அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share