#BREAKING: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழ்நாடு..! அசால்டாக 80 சதவீதத்தை கடந்தது..!
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வாக்குப்பதிவில் தமிழகம் வரலாறு படைத்துள்ளது. இன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழு மாநிலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வருகிறது.
பல தொகுதிகளில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மாலை 6:00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் அலை அலையாய் திரண்டு மக்கள் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சூடுபிடித்த அரசியல் களம்..! நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு..!!
இதுவரை தமிழ்நாடு கண்டிராத ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது. மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் இருக்கின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி 82.24% மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். கடந்த தேர்தலின் போது இதே நேர நிலவரப்படி 65 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் தான் பதிவாகி இருந்தன. ஆனால் இந்த முறை 80 சதவீதத்திற்கும் மேல் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. வாக்குப்பதிவில் தமிழ்நாடு வரலாறு படைத்து விட்டது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!