×
 

சூடுபிடித்த அரசியல் களம்..! நடிகை திரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு..!!

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரை பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் .

தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சூழலில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சியினர் ஜனநாயக கடமை ஆற்றினர்.

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் EPS, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் வாக்குச் செலுத்தினர். தமிழ் திரைப்பட உலகின் பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். குறிப்பாக நடிகை திரிஷா, நடிகர்கள் தனுஷ், பிரபு, அரவிந்த்சாமி, டி. ராஜேந்திரன், இயக்குனர் அட்லி, கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் வாக்குச்சாவடிகளில் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்.

இதையும் படிங்க: பேருந்து சேவையில் தாமதம்..! சிங்காநல்லூரில் வாக்கு செலுத்திய பின் அண்ணாமலை பேட்டி..!

வாக்குப்பதிவு தொடங்கிய உடனே நடிகர் அஜித் வாக்குச் செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். நடிகை திரிஷா கிருஷ்ணன், சென்னையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மிடில் ஸ்கூல் வாக்குச்சாவடியில் காலை 11 மணியளவில் வாக்கு பதிவு செய்தார். அங்கு அவர் அமைதியாக வரிசையில் காத்திருந்து தன் வாக்கை செலுத்தினார். 

இதையும் படிங்க: ஸ்டாலின் நல்லாட்சி தரல..! பாளையங்கோட்டையில் வாக்கு செலுத்திய நயினார் பகிரங்க குற்றச்சாட்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share