×
 

மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க திமுக முயற்சிப்பதாக வினோஜ் பி. செல்வம் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரிசுப் பொருட்கள் வழங்குவது, பண பட்டுவாடா செய்வது ஆகியவற்றை தடுக்க தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தரப்பில் பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக வேட்பாளர் தர்ம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பரிசுப் பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பரிசு டோக்கன்கள், கூப்பன்கள், பண பட்டுவாடா ஆகியவை நிகழ்கின்றன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை இறுக்கமாக்கின. பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன. 

இந்த நிலையில், மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகிமை ஏழையின் உதவியாளர் தினத்தை பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை பாஜக நிர்வாகிகள் வினோஜ் பி.செல்வம் சுட்டிகாட்டியுள்ளார். பணப் பங்கீடு தொடர்பான குற்றஞ்சாட்டும் ஆதாரங்களும், கணக்கில் காட்டப்படாத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

சென்னையை NDA வசம் ஒப்படைத்து, அதன் மீதான பிடியை இழந்து வரும் திமுக, மக்களை விலைக்கு வாங்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில் அவர்கள் எப்போதுமே சாமானிய மனிதனை ஒரு பண்டமாகவே கருதுகின்றனர் என்றும் ஒரு சூப்பர் சென்னையை உருவாக்க, நகரம் முழுவதும் திமுக வேட்பாளர்களைத் தோற்கடிக்குமாறு சென்னை மக்களை வலியுறுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கேள்வியா கேக்குற..? பணப்பட்டுவாடாவை தட்டி கேட்ட அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share