×
 

விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி..! உதயசூரியனுக்கு மாற்றிப் போட்டதாக தேர்தல் அதிகாரி மீது புகார்..!

விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொன்னபோது உதயசூரியனுக்கு தேர்தல் அதிகாரி மாற்றிப் போட்டதாக புகார் எழுந்தது.

சமயபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, ஒரு வயதான பாட்டியின் வாக்கு தவறாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்துக்கு ஆதரவாகப் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் நடைமுறையில் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள சமயபுரம் பகுதியின் 15வது வார்டு, 5ஆம் நம்பர் வாக்குச்சாவடி. அங்கு வாக்களிக்க வந்த ஒரு மூதாட்டி, தனக்கு விசில் சின்னத்துக்கு வாக்கு போட வேண்டும் என்று தெளிவாகக் கூறினார்.

விசில் சின்னம் அந்த வாக்குச்சாவடியில் 5ஆம் வரிசையில் இருந்தது. ஆனால், தேர்தல் அதிகாரி அல்லது உதவியாளர், எலக்சன் கமிஷனின் 1ஆம் நம்பர் பட்டனை அழுத்தி வாக்கைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. 1ஆம் நம்பர் சின்னம் உதயசூரியன் (திமுகவின் சின்னம்) ஆகும்.இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலானது.

இதையும் படிங்க: உங்களுக்கு எதுக்கு விசிலு..? ஹோம் கார்டை வம்பிழுத்த முன்னாள் எம்எல்ஏ..!

வீடியோவில் பாட்டி விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்வது தெளிவாகக் கேட்கிறது. ஆனால், அதிகாரி 1ஆம் பட்டனை அழுத்தியதால் வாக்கு உதயசூரியன் சின்னத்துக்கு சென்றுவிட்டதாக வாக்குவாதம் எழுந்தது. இது தேர்தல் அதிகாரியின் அலட்சியம் அல்லது தவறான செயலாகக் கருதப்பட்டு, அவர்மீது புகார் எழுந்தது

இதையும் படிங்க: விசில் கோலம் போடக்கூடாது..! மாநகராட்சி ஊழியர் அழித்ததாக குற்றச்சாட்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share