×
 
☰

மின் கொள்முதல்..!! தமிழ்நாட்டை வாட்டும் மின்வெட்டு..! தமிழக அரசு முடிவு..!

மின்சார தேவையை சமாளிக்க மின் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து இருப்பதாக கூறப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்கவும், மின்வெட்டைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகம் (TNPDCL) வெளிச்சந்தையில் இருந்து அவசரமாக மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டரின் படி, பீக் அவர்ஸ் எனப்படும் உச்ச நேரமான மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். அதேபோல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கூடுதலாக 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படும். மொத்தம் 4,500 மெகாவாட் அளவில் இந்த அவசர கொள்முதல் நடைபெற உள்ளது.

தனியார் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இந்த மின்சாரம் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இதுகுறித்து விளக்கம் அளித்தார். மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் 3,000 மெகாவாட் மின்சாரம் முழுமையாக கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பீக் அவர்ஸில் மின்சாரத் தேவை சுமார் 3,000 மெகாவாட் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மின் கணக்கீடு இனி தனியாரிடம்! அக்டோபர் முதல் 6 மாதங்களுக்கு ஒப்படைக்க மின்வாரியம் முடிவு!

காற்றாலை மின் உற்பத்தியும் குறைவாக இருப்பதால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைகாலத்திற்குப் பிறகும் மின்சாரத் தேவை உயர்ந்த நிலையில் தொடர்ந்து வருகிறது. அக்டோபர் மாதத்திலும் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share