×
 

மத்திய அரசே காரணம்… முடிஞ்சா PERMISSION வாங்கி தாங்க இபிஎஸ்! பேரவையில் அமைச்சர் பதிலடி…!

சட்டமன்றத்தில் நெல் கொள்முதல் தொடர்பான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நான்காவது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் குற்றம் சாட்டினார். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட 15 லட்சம் நெல் மூட்டைகள் திருவாரூர் கிடங்கில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 15 லட்சம் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு சென்ற பிறகே மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்களை மூட்டைகளை அடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு நிலையங்களிலும் 600 மூட்டைகள் மட்டுமே ஒரு நாளைக்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும், 600 மூட்டைகளுக்கு பதிலாக ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பது தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார்.

கூடுதல் நேரம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாள் ஒன்றுக்கு 600 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்தார். கொள்முதல் நிலையங்களில் இருந்து நான்காயிரம் லாரிகள் மற்றும் 10 ரயில்கள் மூலமாக நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டார். பத்து ரயில்வே வேகங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் நாள் ஒன்றுக்கு தல ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் பதில் அளித்தார். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போது வரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் உடனே அனுமதி வாங்கி தாருங்கள் என்றும் சக்கரபாணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதுக்கு ஆள் இருக்காங்க… ஏன் நான் கேட்க கூடாதா? ஆத்திரமடைந்த வேல்முருகன்… சட்டமன்றத்திலேயே வாக்குவாதம்…!

நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதற்கு மத்திய அரசே காரணம் என்றும் கூறினார். நெல் அதிகமாக விளையும் இடத்தில் 2000 முதல் 3000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்து வருவதாகவும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் பதிலளித்தார். 

இதையும் படிங்க: செம்ம...! நெல் கொள்முதல் விவகாரம்… பேரவையில் குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share