×
 

கரூர் சம்பவம் எதிரொலி… இபிஎஸ் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு! முக்கிய காரணம் தெரியுமா?

நாமக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் தொடர்பாகவும், திமுக அரசின் குறைபாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து வருகிறார். அது மட்டுமல்லாது பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து ஆலோசனைகளையும் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதிமுக தேர்வு செய்த இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. நாமக்கல்லில் இபிஎஸ் பிரச்சாரத்திற்காக அதிமுக தேர்வு செய்த 3 இடங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மாற்று இடம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை முன் வைத்தது. நெடுஞ்சாலைகளில் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்றும், தேசிய, மாநில நெடுஞ்சாலை மக்கள் பயணிக்க தானே எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்திற்கு வாடகை வசூலிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடம் நெடுஞ்சாலை அல்ல என்றும் சாலையின் ஒரு புறத்தில் மட்டுமே பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசின் தரப்பில் விளக்கப்பட்டது. விதிமுறைகள் வகுக்கும் வரை நெடுஞ்சாலைகளில் எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: விஜய்க்கு ஷாக்… தலையில் விழுந்த அடுத்த இடி… பிரச்சார வாகனம் பறிமுதல்…!

நெடுஞ்சாலையில் அனுமதி அளிக்கப்படாது என நீதிமன்றத்தில் அரசு கூறி இருந்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பட்டா இடத்தை தேர்வு செய்யுமாறு அதிமுகவினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

இதையும் படிங்க: தவெக அடாவடி..! சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்… மாவட்டச் செயலாளரின் முன் ஜாமீன் தள்ளுபடி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share