×
 

மழை தீவிரம் அதிகமா இருக்கு… போர்கால நடவடிக்கை எடுங்க… EPS வார்னிங்…!

கனமழை பெய்து வருவதால் போர்கால நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தற்காலிக முகாம்ங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி! தீயசக்தி திமுக... விளாசிய இபிஎஸ்...!

மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு பதில் கூற முடியாது...எடப்பாடி பழனிசாமியை ‘நோஸ் கட்’ செய்த செந்தில் பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share