×
 

டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி! தீயசக்தி திமுக... விளாசிய இபிஎஸ்...!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நெல் கொள்முதலில் ஃபெயிலர் மாடல் திமுக அரசின் குளறுபடியால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைவிட்டன என்றும் நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது எனவும் கூறினார்.

 ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், நெல்லைப் பிடிக்க போதுமான சாக்குப் பைகள் இல்லை என்றும், நெல்லைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் இல்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார். மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகும் கொடுமையையும், விவசாயிகளின் கண்ணீரையும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் நேரலையாகக் காட்டிய பிறகும், இந்த தீயசக்தி திமுக அரசுக்கு இரக்கம் பிறக்கவில்லை என்று கூறினார்.

தமிழகத்தில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகம் என்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சருக்கு, அதுபற்றி முன்பே தெரியாதா என்றும் விவசாயம் பற்றியும், ஒவ்வொரு பருவத்திலும் எந்த அளவுக்கு விளைச்சல் இருக்கும், இந்த ஆண்டு எவ்வளவு அதிகம் விளையும் என்பதைக்கூட கணிக்கமுடியாத ஒருவர், அமைச்சராக இருப்பதற்குத் தகுதி இருக்கிறதா எனவும் கேட்டார். எதையும் செய்யாமல், போட்டோஷூட் நடத்துவதற்கும், புதுப்புது பெயர் சூட்டுவதற்கும் மெனக்கெடுவதால் மட்டும் விவசாயிகளின் துயரம் தீர்ந்துவிடுமா என கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறீங்களே ஸ்டாலின்... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!

 அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதோடு, அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்ததைப் போன்று தினமும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு பதில் கூற முடியாது...எடப்பாடி பழனிசாமியை ‘நோஸ் கட்’ செய்த செந்தில் பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share