×
 

வேன் கெடச்சதும் ஒப்பாரி வெக்குறாரு EPS... செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம்...!

வேன் கிடைத்ததும் எடப்பாடி பழனிச்சாமி ஒப்பாரி வைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார்.

அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்து வருகிறார்.தமிழ்நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக தேர்தல் சுற்றுப்பயணத்தை முடித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்து உள்ளார். தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்த்துவிட்டு அடிமைப்படுத்திய இபிஎஸ், காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கலாமா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ஆட்டம் காணப் போகுது... திமுக கூட்டணியில் உரசல்... இபிஎஸ் உறுதி...!

வேன் கிடைத்துவிட்டது என்பதால் மேலே ஏறி ஒப்பாரி வைத்து மூன்றாம் தர அரசியல் செய்கிறார் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து உள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவின் அலங்கார தேவதை EPS... ஆஹா ஓஹோ என புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share