எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!
எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது என்று EPS குற்றச்சாட்டு முன் வைத்து உள்ளார்.
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மகளிர் இடஒதுக்கீடு (131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காததால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.
மக்களவையில் இன்று மாலை நடைபெற்ற 'டிவிஷன்' (Division) முறை வாக்கெடுப்பில் மசோதாக்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பதிவான 489 வாக்குகளில் 278 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும் 211 பேர் எதிராகவும் வாக்கு. மசோதா வெற்றி பெற 3ல் 2 பங்கு 326 வாக்குகள் தேவை.அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு, அதாவது 326 வாக்குகள் தேவை.
ஆனால், அரசுத் தரப்பிற்கு 48 வாக்குகள் குறைவாகக் கிடைத்ததால் மசோதா தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் அரசியல் அதிகாரம் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை 50% அதிகமாக்கும் வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டதாக இ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் எம்.பி.க்கள் கிடைக்காமல் செய்ததை கொண்டாடுகிறீர்களா என்றும் முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!
பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து தமிழக பெண்களுக்கு மட்டும் அல்ல இந்திய பெண்களுக்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரோகம் எனவும் பெண்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பை கெடுத்துவிட்டதாகவும் இ.பி.எஸ். குற்றச்சாட்டு முன் வைத்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு திமிரு.. அகங்காரம்..!! பரப்புரையில் பந்தாடிய EPS..!