×
 

உள்ளாட்சியில் நல்லாட்சியா? கோர அரசின் குடும்ப ஆட்சி... விளாசிய இபிஎஸ்..!

உள்ளாட்சி மன்றங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்.

மக்களிடமிருந்து வரியை மட்டும் பெற்றுக்கொண்டு சாலை வசதி, கழிவு நீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் திமுக அரசு மேம்படுத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். எங்கு நீதி மறைந்து நிழல் ஆட்சி செய்யுமோ அங்கு நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதி என்ற தத்துவம் தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் தற்போத நிலையை துல்லியமாக வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். உள்ளாட்சியில் நல்லாட்சி என்று விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு ஆளாக்கியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். 

ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு மடங்கு சொத்து வரி உயர்வுடன் ஆண்டுதோறும் ஆறு சதவீத சொத்து வரி உயர்வு, பல மடங்கு குடிநீர் கட்டணம், கழிவு நீர் கட்டணம், தொழில் வரி உயர்வுடன் குப்பை வரியை கூட பல மடங்கு உயர்த்தி உள்ளாட்சி நிதி நிலையை உயர்த்திய நிர்வாக திறன் இல்லாத ஸ்டாலின் மாடல் அரசு, வாங்க கூடிய வரிகளுக்கு ஏற்ப சாலை வசதியையோ அல்லது குடிநீர் வசதியோ, தெருவிளக்கு வசதியோ எதையுமே மேம்படுத்தவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார். 

தமிழக நலனை கவனிக்காமல் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் திமுக அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்டவையே தவிர குடும்ப ஆதிக்கத்திற்கு அல்ல என்பதை தமிழக மக்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உணர்த்த தயாராகி விட்டார்கள் என்பதையே நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடும் கூட்டம் எடுத்துரைப்பதாக தெரிவித்தார். 2026 இல் அதிமுக ஆட்சி அமையும் போது தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடிக்கு சாதகமான சுற்றுப்பயணம்.. உற்றுப்பார்த்த டெல்லி.. அமித்ஷாவே வராராமே?

இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...ஸ்டிக்கர் ஒட்டிகிட்டா மட்டும் போதுமா? இபிஎஸ் சாடல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share