×
 

எடப்பாடிக்கு சாதகமான சுற்றுப்பயணம்.. உற்றுப்பார்த்த டெல்லி.. அமித்ஷாவே வராராமே?

எடப்பாடி பழனிச்சாமி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில் அமித் ஷாவே கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கோவையிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ளார். ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நயினார் நாகேந்திரன், எல் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் முதல் நாள் சுற்றுப்பயண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மக்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும், அதிமுகவின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எடப்பாடி தனது கட்சியை ஒருங்கிணைத்து, மக்களிடையே மீண்டும் செல்வாக்கைப் பெறுவதற்காக இந்த மாபெரும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம், தற்போதைய திமுக ஆட்சியின் குறைபாடுகளை மக்களிடையே எடுத்துரைப்பதும், அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை முன்னிலைப்படுத்துவதும் தான். குறிப்பாக, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மக்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் போன்றவற்றை எடப்பாடி பழனிச்சாமி தனது பயணத்தின் மூலம் விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தின் போது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு, அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க விவாதங்களைத் தூண்டியுள்ளார். நாட்டுக்கு பெருமை சேர்க்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு? எங்கள் கூட்டணி மக்களுக்கு நன்மை செய்யும் என்றும் கூறினார். இந்தக் கருத்துக்கள், அதிமுக-பாஜக கூட்டணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தன. 

இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...ஸ்டிக்கர் ஒட்டிகிட்டா மட்டும் போதுமா? இபிஎஸ் சாடல்

இப்படி தனது சுற்றுப்பயணத்தில் திமுகவை எதிர்த்து கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி அதே வேளையில் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருவது டெல்லி பாஜக தலைமையை உற்று நோக்க செய்துள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் அல்லது இந்த மாதம் இறுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டை மிகத் தீவிரமாக கணக்கு போட்டு வைத்துள்ளதாக அமித் ஷா வருகையின் போதெல்லாம் கூறப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தை கைப்பற்றும் நோக்கில் பலமுறை அமித் ஷா தமிழகம் வந்து செல்கிறார் அதேபோல் பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வரும்போது எல்லாம் தான் செல்லும் மாவட்டங்கள் தொடர்பான பெருமைகளையும் தமிழின் பெருமையும் பேசி வருகிறார். பாஜக தலைமைக்கு தமிழகம் எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்து வெளிப்படுகிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் அமித் கலந்து கொள்ள இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலானது அரசியலில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதையும் படிங்க: எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share