×
 

உண்ட வீட்டுக்கே இரண்டகம்..! திமுகவின் கொத்தடிமை ரகுபதி.. விளாசிய இபிஎஸ்..!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் அமைச்சர் ரகுபதி திமுகவின் கொத்தடிமையாக உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தான் தூங்கிக் கொண்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி கூறுவதாகவும், நான் சிறப்பாக செயல்படுவதால் தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் கேள்விகள் கேட்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் ரகுபதியை பொருத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொத்தடிமையாக செயல்பட்டு வருவதாக சாடிய அவர்,  ரகுபதியை அமைச்சராகி அழகு பார்த்ததே அதிமுக தான் என தெரிவித்தார்.

ரகுபதியை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கி, ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் கொடுத்து நாட்டிற்கு அடையாளம் காட்டியதே அதிமுக தான் என்றும் தற்போது திமுகவிற்கு அடிமை குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ரகுபதியை விமர்சித்தார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவை செய்வதில் முன்னோடியாக இருப்பது அதிமுக தான் என்றும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும் கடமையாக சாடினார். ஆனால் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது என்று ஸ்டாலின் சொல்வதாகவும், நாட்டின் நிலவும் பிரச்சினையை என்னவென்றே தெரியாமல் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். 

இதையும் படிங்க: ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி!

இரு சக்கர வாகனம் தொலைந்ததாக புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்தப் பெண் பேசிய வீடியோ மற்றும் சில ஆதாரங்களை  சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி தூங்கிக் கொண்டிருக்கிறார் என ரகுபதி கூறும் நிலையில், அரசும், காவல்துறையும், முதலமைச்சரும் தான் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், சட்டத்துறை அமைச்சர் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் வியாபாரிகளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.. இபிஎஸ் நம்பிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share