#BREAKING: எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் EPS... அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!
அதிமுக சார்பில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 23 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுகிறார்.
நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும், ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி போட்டியிடுவார் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி போட்டியிடுவார் என்றும், நன்னிலத்தில் காமராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விராலிமலையில் டாக்டர் விஜயபாஸ்கர் போட்டியிட இருக்கிறார் என்றும் மதுரவாயலில் பெஞ்சமின் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் எம் ஆர் விஜயபாஸ்கரும் மயிலம் தொகுதியில் சிவி சண்முகம் எம் பி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு தொகுதியில் கே.பி அன்பழகன் போட்டியிட உள்ளார். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். மதுரை திருமங்கலத்தில் ஆர். பி. உதயகுமார் போட்டியிடவுள்ளார். வேதாரண்யம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ் மணியன் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!
கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு போட்டியிடவுள்ளார். விராலிமலை தொகுதியில் சி விஜயபாஸ்கர் போட்டியிட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா போட்டியிட உள்ளார். பவானி தொகுதியில் கே.சி கருப்பணன் போட்டியிட உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி. வீரமணி போட்டியிட இருப்பதாகவும், கலசப்பாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூரில் தாமரை ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!