×
 

விறு விறு அரசியல்... கள நிலவரம் என்ன? அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு..!

பிப்ரவரி 4ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அதிமுகவின் அரசியல் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்த அதிமுக, கடந்த சில ஆண்டுகளாக உள் குழப்பங்கள், கூட்டணி மாற்றங்கள் மற்றும் புதிய உத்திகளுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இந்த பயணம் தொடர்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த நிலையில், 2025-ஆம் ஆண்டு மீண்டும் இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தல் கூட்டணியை உருவாக்கின. இது தமிழ்நாட்டில் NDA-வின் முகமாக அதிமுகவை முன்னிறுத்தி, DMK-வை வீழ்த்துவதே முதன்மை இலக்கு என அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி வலுப்படுத்தப்பட்டு, பாஜகவுடன் இணைந்து பல சிறிய கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி நான்காம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு தரமில்லா உணவு..! இது தான் தாயுள்ளமா? அதிமுக கண்டனம்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், பிப்ரவரி 4 ஆம் தேதி, புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அறைக்குள் அமர்ந்து அரசியல்..! என்னத்த சொல்ல? விஜயை விளாசிய செல்லூர் ராஜூ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share