×
 

அதிமுகவினர் கவனத்திற்கு! இபிஎஸ் சுற்றுப்பயண தேதியில் மாற்றமாம்... எப்ப தெரியுமா?

எடப்பாடி பழனிச்சாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணம் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் நடத்தி வரும் அவர், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாகவும் திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறார்.

அது மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இதனையில் நான்கு கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி முடித்திருக்கும் நிலையில் ஐந்தாம் கட்ட சுற்று பயணத்தை மேற்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி உரை நிகழ்த்தி வருகிறார். 2026 இல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முழு முனைப்போடு இபிஎஸ் களம் கண்டு வருகிறார்.

இதையும் படிங்க: கொஞ்சம் பொறுங்க... அதிமுக ஆட்சி வரட்டும் எல்லாம் சரியாகும்! இபிஎஸ் நம்பிக்கை

இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற இருந்த சுற்றுப்பயணங்களில் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தர்மபுரி மாவட்டம் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டி பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடத்துகிறார். செப்டம்பர் 29ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு? - எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share