×
 

கட்சிக்காரங்கள குஷிப்படுத்த கூட்டணி ஆட்சின்னு சொல்றாங்க! அமித் ஷா பேச்சை தொடர்ந்து மறுக்கும் இபிஎஸ்..!

தமிழகத்தில் திமுக தலைமையில் ஒற்றை ஆட்சிதான் அமையும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இணைந்து சந்திக்க உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இரு கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். திமுக அரசின் குறைபாடுகள் தொடர்பாகவும் அதிமுக செய்த சாதனைகள் மற்றும் பாஜக உடனான கூட்டணி குறித்து பேசி வருகிறார். இதற்கிடையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வருகிறார். ஆனால் தனிப் பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். 

அமித் ஷா, மதுரையில் நடந்த பாஜகவின் கோர் கமிட்டி கூட்டத்தில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து, பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான பதிலளிக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், அதிமுகவின் கூட்டணி முடிவுகள் தெளிவற்றதாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது, தனிப் பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அவரது இந்த கருத்து கூட்டணியில் சந்தேகத்தை எழுப்பி வருகிறது. இந்த நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த இபிஎஸ், தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைய மக்கள் விரும்பவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக தலைமையில் ஒற்றைக் கட்சி ஆட்சி தான் அமையும் என்றார். கட்சியினரை குஷி படுத்த கூட்டணி ஆட்சி என்று பேசுவதை எல்லாம் பொருட்படுத்த தேவையில்லை கூறியுள்ளார். 

இதையும் படிங்க: இறங்கி வந்த இபிஎஸ்...கூட்டணிக்கு வாங்க! சீமான், விஜய்க்கு அழைப்பு...

இப்படி மாறி மாறி கூட்டணி ஆட்சி விவகாரத்தில் கருத்து கூறும் நிலையில், தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி நிலையானதாக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல கட்சிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்து வரும் நிலையில், கூட்டணி முடிவு ஏற்படுமா என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று ஏற்கனவே அவர் கூறிவிட்டார். இருப்பினும் கூட்டணி ஆட்சி என்ற விவகாரம் வலுத்து வருவதால் பாஜகவோ அல்லது அதிமுகவோ எது உண்மையான நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா அதிரடி நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share