நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை அமையட்டும்... EPS ஆங்கில புத்தாண்டு வாழ்த்து...!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆங்கில புத்தாண்டு, அதாவது கிரிகோரியன் நாட்காட்டியின் தொடக்கமான ஜனவரி 1 ஆம் தேதி, ஒரு முக்கியமான கொண்டாட்ட நாளாக விளங்குகிறது. நாளை ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புதிய ஆண்டு வரவேற்க அனைவரும் பேரார்வத்தோடு காத்திருக்கின்றனர். ஆங்கில புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததை, இந்த நேரத்தில் பெருமிதத்தோடு நினைவுபடுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்னது கஞ்சா நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மா. சு..! விளாசிய இபிஎஸ்...!
மலர்கின்ற இப்புத்தாண்டில் தமிழக மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜன.4,5 ஆம் தேதிகளில் அதிமுக பொதுக்கூட்டம்... "EPS" பங்கேற்பு... முக்கிய அறிவிப்பு...!