×
 

இந்த முறை பாஜகவுக்கு 50 தொகுதிகள்? பியூஷ் கோயல் - EPS தீவிர ஆலோசனை... முக்கிய பேச்சுவார்த்தை...!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வருகை தந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள லீலா பேலஸில் இந்த பேச்சுவார்த்தையானது நடைபெறுகிறது. அதிமுக பாஜக கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக பாஜக 50 தொகுதிகள் கேட்கும் நிலையில் குறைந்தபட்ச 30 தொகுதிகளையாவது வாங்கிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.

குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 25 தொகுதிகள் வரை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் இணை பொறுப்பாளரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக சமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்சம் 30 தொகுதிகளை கொடுத்தால் தான் தங்களது கட்சி நிர்வாகிகளை தேர்தலில் நிறுத்தி வெற்றிவாகை சூட முயற்சிக்க முடியும் என்பது பாஜகவின் கருத்தாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஆட்டத்தை தொடங்கிய பாஜக... EPS உடன் பியூஷ் கோயல் நாளை அதிமுக்கிய ஆலோசனை...!

அதிலும் சர்வே அடிப்படையில் வந்த முடிவுகள் படி தொகுதிகளை குறிப்பிட்டு கேட்க பாஜக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிமுக பாஜக இடையிலான கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணையுமா என்பது தொடர்பாகவும் கூட்டணி முடிவு தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share