திரையரங்குகளை திருவிழா கூடங்களாக மாற்றும் STYLE MAGIC... ரஜினிகாந்த்-க்கு இபிஎஸ் வாழ்த்து...!
இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் காலத்தால் அழியாத ரசிக பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்தவர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். இந்த 50 ஆண்டு காலப் பயணம், ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வெற்றிக் கதையாகவும், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற புரட்சிகரமான பயணமாகவும் அமைந்துள்ளது.
எந்தவித பின்புலமும் இல்லாமல், வறுமையையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் கடந்து, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின் கதை, உழைப்பு, நம்பிக்கை, மற்றும் தனித்துவமான பாணியின் வெற்றிக் காவியம்.
1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படம், ரஜினியை முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது. இந்தப் படம், அவரது திரைப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அவரது எதார்த்தமான நடிப்பும், தனித்துவமான பாணியும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால திரைத்துறை பயணத்தை நிறைவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: “எடப்பாடி என்கிற துதிப்பாடியின் பேச்சு இனி எடுபடாது” - இபிஎஸை மீண்டும் அட்டாக் செய்த பொன்முடி...!
நடிகர் ரஜினிகாந்த் க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று கூறினார். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு என்று வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லி செல்லும் நயினார் இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு...!