எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் அல்ல..! " கிங்"..! அதிமுக Ex. அமைச்சர் செம்மலை பெருமிதம்..!
எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் இல்லை என்றும் கிங் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு, அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில் அதிமுக எம்எல்ஏக்களிடையே ஏற்பட்டுள்ள உள் மோதல் மற்றும் ஆதரவு பேச்சுகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்களுடன் தவெகவுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. இதனால் விஜயின் கட்சிக்கு 113 ஆதரவு கிடைத்துள்ளது.
மீதமுள்ள 5 இடங்களுக்கு ஆதரவு தேடும் முயற்சியில் அதிமுகவின் பங்கு முக்கியமானதாக மாறியுள்ளது. அதிமுகவில் தற்போது 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட இரண்டில் மூன்று பங்கு அல்லது 30க்கும் மேற்பட்டோர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல்கள் பரவின.
இதையும் படிங்க: தமிழ்நாடே காத்திருந்த முடிவு... வதந்திகளுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி... தெள்ளத்தெளிவாக அறிவித்தது அதிமுக தலைமை...!
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் அல்ல அவர் கிங் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்தார். அதிமுகவின் அடுத்த கட்ட முடிவை எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் விலை போக மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 118 பேர் ஆதரவு தேவையா? விஜய் போடும் மாஸ்டர் ப்ளான்! ஆட்சி அமைப்பது உறுதி