×
 

#2026ELECTION: பசுமை வீடு, பட்டுச்சேலை..! வாக்குறுதிகளை அள்ளி வீசிய இபிஎஸ்..!

2026 இல் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் நெசவாளர்களுக்கு மீண்டும் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார்.

அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்து வருகிறார். நேற்று, திருவாரூரில் விவசாயிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது, அதிக மழையால் வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைகின்ற போதும், வறட்சியால் சேதம் அடைகின்ற போதும், அதை முழுமையாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறினார். விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளதாகவும், மீண்டும் உங்கள் துணையோடு அதிமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் கூறியிருந்தார்.

அந்த வகையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நெசவு தொழிலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது, கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்து விட்டதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்தனர். அதிமுக ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது என்றும் அதிமுக ஆட்சி அமைந்த பின்பு ஏழை நெசவாளர்களுக்கு தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி! சீமான் திட்டவட்டம்.. இபிஎஸ் அழைப்பு நிராகரிப்பு..!

பாரம்பரியமாக தொழிலில் ஈடுபடுவோரை வாழவைக்கும் வகையில் அதிமுக ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் நெசவாளர்களுக்கு மீண்டும் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய இபிஎஸ், ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தில் மணமகளுக்கு இலவச பட்டு சேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: கட்சிக்காரங்கள குஷிப்படுத்த கூட்டணி ஆட்சின்னு சொல்றாங்க! அமித் ஷா பேச்சை தொடர்ந்து மறுக்கும் இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share