×
 

ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் தான் திமுக ரோல் மாடல்... எடப்பாடி பழனிச்சாமி சாடல்...!

ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் தான் திமுக ரோல் மாடல் என எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் தொடர்பாகவும் திமுக ஆட்சி குறைபாடுகள் தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்து வருகிறார். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், என்னுடைய குழந்தைகளுக்கு திமுகவினர் பெயர் வைத்து விட்டார்கள் என கூறினார். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து புதிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என தெரிவித்தார்.

கல்வியில் முதன்மை மாநிலம் என்ற சாதனையை படைக்க அதிமுக ஆட்சி தான் காரணம் என்றும் அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்ததாக தெரிவித்தார். அதே 10 ஆண்டுகளில் 21 பாலிடெக்னிக் கல்லூரிகளை கொண்டு வந்ததாகவும் பட்டியலிட்டார். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கல்வி செல்வத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்றும் திமுக லஞ்சம் வாங்குவதற்கும், ஊழல் செய்வதற்கும் தான் ரோல் மாடல் என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் தான் இந்தியாவுக்கே வரி குறைப்பு... உருட்டி தள்ளிய சி.வி.சண்முகம்...!

டாஸ்மாக்கில் கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவதில் தான் திமுக ரோல் மாடல் என்று சாடினார். 98 சதவீதம் வாக்குகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது வடிகட்டிய பொய் என்றார். காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் ஒருவர் பேசி இருக்கிறார் என்றும் சாறு குடித்து சக்கையை கொடுப்பதில் திமுக ரோல் மாடல் என்றும் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே. எஸ் அழகிரி பேசியதை சுட்டிக்காட்டி பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. ஒரு குடும்பமே முக்கியமான பொறுப்புகளில் இருப்பதாகவும், உதயநிதி தனது தந்தையை புகழ்கிறார் என்றும் ஸ்டாலின் தனது மகனைப் புகழ்கிறார் எனவும் விமர்சித்தார். 

இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது...திமுக கூடாரம் காலி... ரவுண்டு கட்டிய இபிஎஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share