வாங்க..! சரித்திர வெற்றி படைப்போம்...! இபிஎஸ்க்கு நன்றி சொன்ன TTV தினகரன்..!
என் டி ஏ கூட்டணியில் இணைந்ததற்கு வாழ்த்துச் சொன்ன எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததற்கு டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்து இருந்தார். தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
அன்போடு வரவேற்று, அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது எடப்பாடி பழனிச்சாமியின் பெயரைக் கூட டிடிவி தினகரன் கூறாமல் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
இதையும் படிங்க: வாழ்த்து சொன்ன இபிஎஸ்... கண்டுக்காத TTV..! பெயரைக் கூட குறிப்பிடாமல் கடந்து சென்ற சம்பவம்..!
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதாவின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம் என்றும் கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: WELCOME BACK..! ஏன்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்த டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு...!