விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது..! நாங்கள் ஊழல் கட்சியா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
அதிமுகவை ஊழல் கட்சி என கூறிய விஜய்க்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார்.
விஜய் தமிழக அரசியலில் நுழைந்ததிலிருந்தே ஊழலை ஒழிப்பேன் என்ற உறுதிமொழியை மிக அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். அவரது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் மையக் கொள்கையாகவே ஊழல் ஒழிப்பை அவர் வைத்திருக்கிறார். இது வெறும் பேச்சு அல்ல; அவரது பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், அறிக்கைகள் எல்லாவற்றிலும் இந்தக் கருத்து தொடர்ந்து ஒலித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியபோது, 2024 பிப்ரவரி மாதத்தில், விஜய் தெளிவாகக் கூறினார். ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும், பிளவுவாத அரசியலையும் எதிர்த்து ஒரு புதிய பாதையை உருவாக்குவதே தனது நோக்கம் என்று. அரசியலுக்கு வருவதற்கான காரணமாகவே ஊழலை ஒழிப்பதை முதன்மையானதாக அவர் சொன்னார். பணம், சாதி, மதம், இனம் போன்றவற்றால் பிரிக்கும் அரசியலை வெறுப்பதாகவும், லஞ்ச ஊழல் இல்லாத திறமையான நிர்வாகத்தை உருவாக்குவதாகவும் அறிவித்தார்.
அதன் பிறகு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்த உறுதிமொழி மீண்டும் மீண்டும் வந்தது. திமுக, அதிமுக கட்சிகளை ஊழல் கட்சி என்று விஜய் விமர்சித்து வந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இரண்டாம் கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!
இதன் பிறகு விதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை என்றும் பொதுவெளியில் வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியும் எனவும் தெரிவித்தார். விஜய் நேரில் செய்தியாளர்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தமிழ்நாட்டில் உண்மை நிலவரம் அவருக்கு தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என விஜய் எப்படி கூறுகிறார் என்றும் விஜய்க்கு நாட்டு நடப்பை தெரியவில்லை என்றும் விமர்சித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்து மறைமுகமாக பேசி எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கனிமொழி டெல்லிக்கு போனா கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போனா அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!