×
 

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

கிட்னியை விற்பனை செய்ததாவது  பணத்தை செலுத்த நிர்ப்பந்தம் செய்வதாக பைனான்சியர் மீது பெண் ஒருவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் வாங்கிய 2லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியுடன் 6 லட்சம் ரூபாய் வரை கட்ட வேண்டும் எனவும்  கட்டுவதற்கு பணம் இல்லையென்றால் கிட்னியை விற்பனை செய்ததாவது  பணத்தை செலுத்த நிர்ப்பந்தம் செய்வதாக பைனான்சியர் மீது பெண் ஒருவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகுணா.ஜவுளி வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த 2024ம் ஆண்டு முதல் குடும்ப தேவைக்காக வீரப்பன்சத்திரம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் கிருஷ்ணகுமார் என்பவரிடம் 10ஆயிரம் ரூபாய் முதல் சிறுகசிறுக 2லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இதற்காக அதிக அளவில் பணத்தை வட்டியாக சுகுணா பணத்தை செலுத்தியுள்ள நிலையில் இன்னும் பணத்தை செலுத்தக்கோரி வற்புறுத்துவதாகவும் இதற்கிடையே பணம் செலுத்த முடியாத நிலையில் சுகுணா பணத்தை கிட்னியை விற்பனை செய்ததாவது பணத்தை செலுத்துவதாக சுகுணா கூறியதற்கு பைனான்சியர் கிருஷ்ணகுமார் கிட்னி விற்பனை செய்வதற்கு ஆள் இருப்பதாகவும் கிட்னி விற்பனை செய்து பணத்தை கொடு என கூறியதாக கூறப்படுகிறது

.இதையடுத்து கடன் வாங்கிய சுகுணா கிட்னி விற்பனை செய்து கடனை அடைக்குமாறு வற்புறுத்தும் பைனான்சியர் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: மாத்தி ஓட்டு போட்றக் கூடாது! சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

இதற்கிடையே எஸ்பி அலுவலகத்திற்கு வந்த பைனான்சியர் கிருஷ்ணகுமார் வந்த நிலையில் இருவரையும் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்...

இதையும் படிங்க: விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share