அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!
ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மனைவி உள்ளிட்ட மூன்று பேர் மீன்பிடி வலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில், மீன்பிடி வலையில் சிக்கியதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தை சேர்ந்த 45 வயதான செல்லத்துரை, தறிபட்டறையில் வேலைசெய்து வந்துள்ளார். இவரது மனைவி பாரதி, பக்கத்து வீட்டை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி பிரதீபா உள்ளிட்ட 7 பேர், திருச்செங்கோடு அருகே சித்தம்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் 7 பேரும் குளிப்பதற்காக பாசூர் காவிரி கரைக்கு சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஏற்கனவே மீன்பிடிப்பதற்காக விரித்திருந்த வலையில் பிரதீபா சிக்கி உள்ளார். அவரை காப்பாற்ற சென்ற பாரதி மற்றும் செல்லத்துரையும் அடுத்தடுத்து மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் மீள முடியாமல் மூவரும் நீரில் மூழ்கினர்.
இதையும் படிங்க: தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற உறவினர்கள் கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் சென்று மூவரையும் மயங்கிய நிலையில் மீட்டனர். பின்னர் உடனடியாக மூவரும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்செங்கோடு அருகே மொளசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அதன் பின் ஈரோடு அரசு மருத்துவமனைக்கும் கொண்டு வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே மூன்று பேரும் உயிரிழந்து விட்டதாக ஈரோடு அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மொளசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டதாகவும், ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததும் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மொளசி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் சொந்த தொகுதியாகும் என்பது குறிப்பிடத்தகக்து.
மூவரின் உடல்களைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
இதையும் படிங்க: ஐபிஎல் 2026: ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!