தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!
இன்று சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இம்மாத இறுதியில் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இம்மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய பலத்த காற்றுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேக பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 31 பேர் உயிரிழப்பு! மீட்பு பணிகளை துரிதப்படுத்த அரசு உத்தரவு!
20-05-2026 மற்றும் 21-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேக பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஜில்லென மாறப்போகும் தமிழகம்..!! வரும் 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது தெரியுமா..??