சூடுபிடிக்கும் ஈரோடு இரட்டை கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீஸ்..!
ஈரோடு மாவட்டத்தில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகியோர் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும் பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகனும் மகளும் தனியாக வசித்து வரும் நிலையில் தன் மனைவியுடன் ராமசாமி வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி கவிசங்கர் தன் தந்தைக்கு போன் செய்த போது எடுக்காததால் அருகில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்க சொல்லி உள்ளார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் ராமசாமியும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டதும், வீட்டில் இருந்த 12 சவரன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்தது. இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: பகீர் கிளப்பிய ஈரோடு இரட்டை கொலை சம்பவம்..! போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பறந்த உத்தரவு..!
இதில், பிடிபட்ட இந்த மூன்று பேர் தான் இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து ராஜேஷ், மாதேஷ் , அச்சியப்பன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் காவல்துறை ஐஜி விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில யாருக்கும் பாதுகாப்பு இல்ல..! சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு.. நயினார் கடும் தாக்கு..!