சித்ரா பௌர்ணமி..! எட்டுக்குடி முருகனுக்கு 56 மணி நேர பாலாபிஷேகம்..!! அலைகடலென குவிந்த பக்தர்கள்..!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திட்டக்குடி முருகன் கோவிலில் 56 மணிநேர பாலாபிஷேகம் நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் திருக்குவளை வட்டத்துக்கு உட்பட்ட எட்டுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் ஆதிபடை வீடுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இங்கு சத்ரு சம்ஹார ஸ்தலமாகவும், வான்மீகி சித்தரின் ஜீவ சமாதி இருக்கும் இடமாகவும் இக்கோயில் சிறப்பு பெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இங்கு நடைபெறும் பெருவிழா, பக்தர்களின் அளவற்ற பக்தியையும், கோயிலின் புகழையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைகிறது. 2026ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியை ஒட்டி, எட்டுக்குடி முருகன் கோயிலில் விழா ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் மயில்வாகனம், வெள்ளி ரிஷபவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முருகனுக்கு 56 மணி நேரம் இடைவிடாத பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி - அதிரடி காட்டிய போலீஸ்...!
இந்த 56 மணி நேர பாலாபிஷேகத்தின் போது, பக்தர்கள் பால் காவடிகளுடன் பெரும் எண்ணிக்கையில் கோயிலுக்கு வந்து குவிந்தனர். பால் நிறைந்த குடங்களைத் தங்கள் தோள்களில் சுமந்தபடி, முருகனின் அருளை வேண்டி வந்த அவர்கள், கோயிலுக்குள் நுழைய மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. வெயிலின் கொடுமையையும், களைப்பையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பால் காவடியைச் சுமந்து வந்த பக்தர்கள், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து, தங்கள் மனக்குறைகளை நீக்கி, அருள் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆன்மீகமா? ஸ்ட்ராடஜியா? விஜயின் அடுத்த அடியில் வேளாங்கண்ணி!