×
 

ஆன்மீகமா? ஸ்ட்ராடஜியா? விஜயின் அடுத்த அடியில் வேளாங்கண்ணி!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்ய இருக்கிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் மாற்றத்திற்கான முகமாக இருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர்.

இருப்பினும் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சொல்லி வருகின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், அடுத்ததாக தேதி சீரடி சாய்பாபாவை வழிபட்டார். இவை அவரது பக்தி நிலையையும், ஆன்மீக நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி, தற்போதைய அரசியல் சூழலில் விஜய்யின் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த பின்னர், சாலை மார்க்கமாக கோவிலை அடைந்த அவர், அங்கு அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்தார்.

இதையும் படிங்க: கருத்துக் கணிப்பால் அலர்ட் ஆன விஜய்... கடைசி நேரத்தில் எடுத்த ‘மேஜிக்’ முடிவு... இதுதான் காரணமா?

இதனைத் தொடர்ந்து சீரடிக்கு சென்று சாய்பாபாவை வழிபட்டு இருந்தார் விஜய். இந்த நிலையில் அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தில் விஜய் வழிபாடு மேற்கொள்ள இருக்கிறார். வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை அதிகாலை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய். அதனை தொடர்ந்து நாகூர் தர்கா வழிபாட்டில் பங்கேற்க உள்ளார்.இன்று இரவே வேளாங்கண்ணியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: உரிமைகள் முழுமையா கிடைக்கணும்..! விஜய் உழைப்பாளர் தின வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share