இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே எடப்பாடி... அதிமுகவில் உதயமாகிறது 5வது அணி... அப்செட் மாஜி அதிரடி முடிவு...!
அதிமுக ஐந்து பிரிவுகளாக உடையும் அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதிமுக ஐந்து பிரிவுகளாக உடையும் அபாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று செங்கோட்டையன் கோபிசெட்டி பாளையத்தில் சற்று முன்பு அளித்த பேட்டியில் வரும் ஐந்தாம் தேதி தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள தகவல்களின் படி எடப்பாடி பழனிச்சாமியின் மீது கடுமையான அதிருப்தியில் செங்கோட்டையன் இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனாலதான் கடந்த மார்ச் மாதத்திலிருந்து செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மோதல் போக்கை கையாண்டு வருகிறார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்க விழாவில் எம்ஜிஆரின் படம் இல்லாததால் இந்த விழாவை புறக்கணித்ததிலிருந்து இப்போது “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்று இபிஎஸ் பயணத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது வரை அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார்.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியின் விசுவாசமான நிர்வாகியாக வலம் வரும் செங்கோட்டையன், இப்படி திடீரென கட்சியை விட்டே விலகும் அளவிற்கு முடிவெடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முடிவு பெருசா இருக்குமோ? செங்கோட்டையன் தீவிர ஆலோசனை! கலக்கத்தில் கட்சியினர்
நான்கு முறை அமைச்சர், ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர் என்று திமுகவின் துரைமுருகனுக்கு இணையாக மூத்த உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிக்கத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஈரோடு அரசியலில் செங்கோட்டையனுக்கு கீழே பணிபுரிந்த கேசி கருப்பண்ணன் என்ற புதிய நபரை எடப்பாடி பழனிசாமி வளர்த்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அதிமுகவில் தனக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, கே.சி.கருப்பணனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக செங்கோட்டையன் கருதுகிறார். முக்கியமான ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பிரச்சார பயண திட்டங்களில் செங்குடையனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கேசி கருப்பனுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு அதிருப்திகள் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு தொடர்ந்து இருந்த நிலையில், இப்போது அதிமுகவின் ஐந்தாவது அணியாக செங்கோட்டையன் அணி உருவாக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு... கிரீன் சிக்னல் கொடுத்த செங்கோட்டையன்... எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!