தனியார் மயமாகிறதா மின்சாரத்துறை?... தவெகவுக்கு மீண்டும் செக் வைத்த சிவசங்கர்... அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு...!
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழுதும் தொடரும் மின்வெட்டு
நடவடிக்கையின்றி தமிழக அரசு மௌனம் காப்பது, மின்சாரவாரி யத்தை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போகிறதா என்ற சந்தோத்தை எழுப்புவதாக முன்னாள் மின்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மின் வெட்டு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் புதிதாகபொறுப்பேற்றுள்ள மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்துறை அதிகாரிகளை அழைத்து முறையான ஆய்வு கூட்டம் நடத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், சமூக வலைதளங்களில் மின்துறையில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. மின்துறை கடனில் உள்ளது போன்ற அனைவருக்கும் தெரிந்த தகவல்களையே பொறுப்பற்றமுறையில் பேசி மழுப்பலாக நடந்து கொள்வது, தற்போதைய தமிழ்நாடு அரசு ஒன்றிய பாஜக அரசின் குரலாக மாறிவருகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக முன்னாள் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே இந்த மின் துறை பணியாளர் பற்றாக்குறையுடனும், கடன் சுமையுடனும் இருந்த போதுதான் கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்கப்பட்டது என்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள பணியாளர்கள் இந்திய அளவில் பிறமாநில தொழிலாளாகளை விட திறமையானவர்கள் தான் என்று தெரிவித்துள்ள அவர் , இந்திய அளவில் பிறமாநிலாங்களில் மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைத்த மத்திய அரசு தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியை மேற்கொண்டது மத்திய அரசு. ஆனால் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு சிறிதும் இடம் தராது மின்துறையை திறம்பட நிர்வகித்து வந்தது
இதையும் படிங்க: பிராமணராக இருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?... பெரியார் பெயரைச் சொல்லி ‘ஸ்ரீரங்கம் ரமேஷ்’ கொடுத்த பதிலடி...!
ஆனால் தற்போது தவெக ஆட்சி பெறுப்பேற்று 20 நாட்கள் ஆகும் நிலையில் மின் துறை சார்பாக ஒரு ஆய்வு கூட்டம் கூட கூட்டாமல் தற்போதைய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பெயரளவில் பணியாளர் பற்றாக்குறை கடன்சுமை என்று பொறுப்பற்ற வகையில் சமூக ஊடகங்களில் பதிலளிப்பதை பார்க்கும் தமிழ்நாடு அரசு ஏதோ உள்ளோக்கத்துடன் செயல்படுகிறதோ?
ஒன்றிய பாஜக அரசின் குரலாக தமிழகம் மாறி வருகிறதோ,? மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு தமிழக அரசு துணை போகிறதோ?என் றெல்லாம் எண்ணிடத் தோன்றுவதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
எனவே மின் தட்டுப்பாட்டு பிரச்சனையில் தீர்வு காண்பது குறித்த நடவடிக்கையில் தமிழக அரசு மௌனம் களைத்திட வேண்டுமென்றும் அவர் தனது முகநூல் பதிவு மூலம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!