“மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது”... அதிமுகவினருக்கு அடித்த ஜாக்பாட்... எஸ்.பி.வேலுமணி சொன்ன குஷியான செய்தி...!
ஒவ்வொரு வாக்கு சாவடியில் யார் அதிக ஓட்டு வாங்குகிறார்களோ அவர்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என பல்லடத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளராக பல்லடத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பரமசிவம் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிமுக கூட்டம் பல்லடத்தை அடுத்துள்ள 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,உடுமலை ராதாகிருஷ்ணன்,எம்.எஸ்.எம் ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 400 வாக்குகள் பெற வேண்டும். அதற்கு மேலும் வாங்க வேண்டும். யார் அதிக ஓட்டு வாங்குகிறார்களோ அவர்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். பூத் பகுதியிலுள்ள பெண்கள் 5 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று அமர்ந்து பேசி வாக்கு சேகரிக்க வேண்டும். நோட்டீஸ் வழங்கிவிட்டு அப்படியே செல்ல கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் அமர்ந்து பேசி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.
மேலும் நமது ஆட்சியில் வழங்கிய நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி திட்டங்களையும் மத்திய அரசு செய்த திட்டங்களையும் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் படும் வேதனைகளை எடுத்து கூற வேண்டும். போதை பொருட்கள் நடமாட்டம், பெண்கள் பாதுகாப்பின்மை போன்றவற்றை எடுத்து கூற வேண்டும். திமுகவின் பொய் வாக்குறுதிகளை எடுத்து கூற வேண்டும். வீடில்லாதாவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டி தரப்படும். கல்வி கடன் ரத்து செய்யப்படும். தாலிக்கு தங்கம் மீண்டும் வழங்கப்படும். திமுகவின் எதிர் வாக்குகள் அனைத்தும் நமக்கு வர வேண்டும்.
இதையும் படிங்க: கோவை அதிமுக கோட்டை... திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி..! எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!
புதிய கட்சி ஆரம்பித்தவர்கள், நடிகர் விஜய் போன்றவர்கள் நமது கணக்கிலேயே கிடையாது. பத்து நாட்களாக எங்கு போனார் என்றே தெரியவில்லை.அவுட் ஆப் ரேஞ்சில் இருக்கிறார். தன் கட்சி காரர்களையே அவர் கரூரில் காப்பாற்றவில்லை. உயிருக்கு போராடி கொண்டிருந்த போதும் போய் பார்க்கவில்லை .திமுக தொடர்ந்து வெற்றி பெற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் காரணம். அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் அற்புதமான தலைவர். உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட்டிருக்கும். திமுகவின் எதிர்ப்பு ஓட்டு நமக்கு தான் வர வேண்டும். வேறு கட்சிக்கு போனால் திமுகவிற்கு வாய்ப்பாகி விடும் என பேசினார்.
இதையும் படிங்க: நாட்டின் 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு..! சென்சஸ் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!!