×
 

அடிச்ச எல்லா பந்துமே சிக்ஸ் தான்..!! கிரிக்கெட் விளையாடி அசத்திய எஸ்.பி வேலுமணி..!

கோவையில் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வரும், அதிமுக கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 24 அணிகள் பங்குபெற்ற இபிஎஸ் ட்ராபி, சிங்கை சாம்பியன்ஷிப் என்ற பெயரில் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. 24A, வட்டக்கழக செயலாளர் மனோகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பரிசு கோப்பைகளை வழங்கினார். மேலும் சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன் ஆகியோர்களுக்கும் பரிசுகளை வழங்கியதுடன், போட்டியில் கலந்துகொண்ட அணைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து அதிமுக விளையாட்டு மேம்பாட்டு அணியை துவங்கி வைத்த எஸ்.பி வேலுமணி, தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்து மெடலை கழுத்தில் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் கழகத்தில் சிறந்த  இளைஞர்களுக்கு காத்திருப்பதாகவும் கூறினார். அதை தொடர்ந்து ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கி சிறப்பித்தார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..!

அதைதொடர்ந்து விளையாட்டு வீரர்களின் வேண்டுகோளை ஏற்று, கிரிக்கெட் விளையாடினார் எஸ்.பி வேலுமணி. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மன் கே அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம், உட்பட கழகத்தின் நிர்வாகிகள் பந்துவீச அனைத்து பந்துகளையும் லாவகமாக அடித்து  இளைஞர்களையும், விளையாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட கழக செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன், கழக அம்மா பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் V.P. கந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.பிரபாகரன், பகுதிகழக செயலாளர்கள், உலகநாதன், மதனகோபால், உட்பட வட்டகழக செயலாளர்களும், இளைஞர்களும், விளையாட்டு வீரர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

இதையும் படிங்க: சோகத்தில் முடிந்த சுற்றுலா.. நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி.. கண்ணீர் வடிக்கும் நண்பர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share