×
 

சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஆங்காங்கே வெடி விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பாட்டாசு தயாரிப்பதற்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இங்குப் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கமல் குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று கோகுலேஷ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளின் என்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் இந்த பட்டாசு ஆலையில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 4-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

இதையும் படிங்க: RCB வெற்றி விழாவில் நிகழ்ந்த சோகம்... கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 10 பேர் உயிரிழப்பு!

பின்னர் விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்புத்துறையினர் மளமளவென எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே இந்த வெடி விபத்தில் முதற்கட்டமாக 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாசு ஆலையின் போர்மேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இளைஞர் கொலைக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு...யாரை காப்பாற்ற பார்க்கிறீர்கள்? நீதிபதிகள் காட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share