இதில்கூடவா மோசடி...திருநள்ளாறு சனீஸ்வர கோயில் பெயரில் போலி இணையதளம்... மோசடி அர்ச்சகர், பெண் கைது
திருநள்ளாறு சனி பகவான் கோயில் பிரசித்தி பெற்றது. தமிழகம் முழுவதும் பக்தர்கள் வருகை தரும் இக்கோயிலின் பெயரால் இணையதளம் தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணும் அர்ச்சகரும் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சனிபகவான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு நேரடியாக பிரசாதம் அனுப்பப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோயிலின் இணையதள முகவரிக்கு பணம் அனுப்பினால் பிரசாதம் வந்த நிலையில் திடீரென பக்தர்கள் அனுப்பின பணத்துக்கு பிரசாதம் வரவில்லை.
பணம் பற்றிய விவரமும் இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், தாங்கள் கோயிலுக்கு பணம் செலுத்தி விட்டதாகவும், ஆனால் பிரசாதம் வரவில்லை என கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த இணையதளத்தை கண்ட கோயில் நிர்வாகம் அது போலியான இணையதளம் என தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த கோயில் மேலாளர் சீனிவாசன், கடந்த 12ம் தேதி திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையும் படிங்க: ஈசிஆர் கார் மிரட்டல் சம்பவம்.. 6 பேர் கைது... போலீசார் கூறுவது உண்மையா?...
இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், போலியான இணையதளத்தை தொடங்கி கோயில் நிர்வாகம் பெயரில் பணமோசடியில் ஈடுபட்டது கோயில் அர்ச்சகரான வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூரை சேர்ந்த ஜனனி என தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் பெயரில் பல ஆண்டுகளாக போலி இணையதளம் நடத்தி பக்தர்களிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு சென்னையிலிருந்து போலியான பிரசாதங்கள் அனுப்பி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோயில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள் (52), பெங்களூரு பெண் ஜனனி (44) ஆகிய 2 பேரை இன்று கைது செய்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.87 கோடி மோசடி! தாய்லாந்தில் பதுங்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர் நாடு கடத்தல்..