மட்டம் தட்டிய ரவுடி... MURDER செய்த சகாக்கள்... தலையை சிதைத்து, கழுத்தை அறுத்த கொடூரம்!
திண்டுக்கல்லில் சரித்திர பதிவேடு ரவுடியை கொலை செய்த சக ரவுடிகள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கு பழி தீர்ப்பதற்காக மற்றொரு கொலை என்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதிலும் ரவுடிகளை சக ரவுடிகளை படி தீர்ப்பதற்காக கொலை செய்வதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி சிவமணி தன் கீழ் உள்ள ரவுடிகளை மட்டம் தட்டியதாக தெரிகிறது. ஆத்திரத்தில் சக ரவுடிகளே சிவமணியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தலையை சிதைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்தவர் சிவமணி. சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவமணி தனது கீழுள்ள ரவுடிகளை தரக்குறைவாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து, சிவமணியை தீர்த்து கட்டுவதற்காக சக ரவுடிகளே முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, கொடைக்கானலுக்கு சிவமணியை சுற்றுலா செல்வதாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிவமணியை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். மேலும், சிவமணியின் முகத்தை சிதைத்து கொலை செய்த ரவுடிகள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உடலைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிவமணியை கொலை செய்த ஐந்து ரவுடிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், சிவமணியை கொலை செய்த ஐந்து ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். சரித்திர பதிவேடு ரவுடியை சக ரவுடிகளே கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக, இந்த ஆண்டிலேயே, இரு ரவுடிகள், அருண் மற்றும் அவரது கூட்டாளி, கோயில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்ட பெண்... திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...!
இதையும் படிங்க: சிபிஎம் - இந்து முன்னணியினர் குடுமிப்பிடி சண்டை! மாறி மாறி தாக்கிக் கொண்டதால் போலீஸ் திணறல்!