×
 

விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறீங்களே ஸ்டாலின்... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!

நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் வயிற்றில் அடிப்பதாக திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் ராஜேந்திரன் குற்றம் சாட்டினார்.  சரியான திட்டம் இன்மையால் திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடிப்பதாக குற்றம் சாட்டினார். நாகையில் பத்து நாட்களுக்கும் மேலாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவது கண்டனத்திற்கு உரியது கிடையாது நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறினார். பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுவதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: உலகத் தரத்தில் உருவாகும் பெரியார் உலகம்... ரூ.1.70 கோடி நிதியை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்...!

எனவே, டெல்டாக்காரன் என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனை முதலமைச்சர் ஸ்டாலின் காக்க வேண்டும் என நயினார் வலியுறுத்தி உள்ளார். நெல் மூட்டைகள் தேக்கம் தொடர்பாக விவசாயிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனிடையே, நெல் மூட்டைகள் தேக்கமடைவதாகவும் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை குற்றம் சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கீழடி TO வாக்குத் திருட்டு... என்ன ஆணவம் இருக்கும்? மத்திய பாஜக அரசை கேள்விகளால் துளைத்த முதல்வர் ஸ்டாலின்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share