×
 

பொது சொத்து சேதம்: விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை!

கடந்த 2015ம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் நடத்திய போராட்டத்தின்போது பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டத்தின்போது பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட இருவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: மதுரை மாநாட்டில் ரூ.36,660 கோடி முதலீடு! 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு!- முதல்வர் ஸ்டாலினின் மெகா திட்டம்!

திருவாரூர் மாவட்டம் காரியமங்கலம் கிராமத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பி.ஆர். பாண்டியன் தலைமையில் 22 நபர்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அதன் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் என்பவருக்கு 13 ஆண்டு மூன்று மாதம் சிறைத் தண்டனையும், ரூ.13,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமிருந்த 18 பேர் விடுதலை செய்யப்பட்டு, இந்த வழக்கில் தீர்ப்பை நிறைவுசெய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்தப் போராட்டம் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்டதாகக் கருதப்பட்டு, இந்தக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: ட்ரம்ப் மோடியிடம் மன்னிப்பு கேட்கணும்! அவர் உலக அரசியலில் அதிக செல்வாக்குமிக்க தலைவர்!! அமெரிக்க பாடகி புகழாரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share