×
 

#BREAKING இப்படிக்கூட சாவு வருமா?... எமனாக மாறிய கொசுவர்த்தி... தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை உட்பட மூவர் பலி...!

பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அடுத்து கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் கொசுவத்தியால் வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பேர் உயிரிழந்ததாக அசம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டரை வயது பச்சிளம் குழந்தையான ஜெயஸ்ரீயும் உடல் கருகி உயிரிழந்தார் என்ற செய்தி அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது தனது மனைவி ஜெய்சித்ரா மற்றும் இரண்டரை வயது குழந்தையான ஜெயஸ்ரீ . நேற்று செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கன்னிவாக்கம் பகுதியில் தனது  அக்கா மகேஸ்வரி வீட்டில் பார்த்திபன் தனது மனைவி மற்றும் குழந்தைளுடன் தங்கியுள்ளார். 

அங்கு சென்றவுடன் மகேஸ்வரி தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தையை அழைத்து கொண்டு சாலையூர் அருகே தனியார் மருத்துவமணிக்கு சென்றுயுள்ளார். இதனால் மூன்று பேரும் கன்னிவாக்கத்தில் உள்ள அக்கா வீட்டிலேயே இரவு தங்கியுள்ளனர். காலை சிகிச்சை முடிந்து தனது குழந்தையுடன் வீடு திரும்பிய மகேஸ்வரி வீடு முழுவதும் புகை மம்டலமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது படுக்கை அறையில் எட்டி பார்த்த போது தனது தம்பி பார்த்திபன், அவரது மனைவி ஜெய்சித்ரா, 2 வயது பச்சிளம் குழந்தையான ஜெய்ஸ்ரீ ஆகிய 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதையும் படிங்க: தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

அங்கிருந்தவர்கள் உடனடியாக மறைமலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூன்று உடல்களையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இரவு தூங்கும்போது கொசுவத்தியை ஏற்றி வைத்து தூங்கியதாக அதன் மூலம் தீப்பற்றி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது கொசுவர்த்தி சுருளில் இருந்த தீயானது அங்கிருந்த சுவிட்ச் பாக்ஸ் மீது விழுந்து தீப்பற்றி இருக்கலாம் என்றும், அப்போது படுக்கை அறை மேல் சுவரில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஃபால் சீலிங் தீயால் உருகி மூவர் மீதும் விழுந்ததில் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் முதற்கட்ட விசாரணை மூலம் தெரிவித்துள்ளனர். பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 இது சம்பந்தமாக மறைமநகர் காவல் நிலத்தில் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்... தனியார் ஆம்னி பேருந்து பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த பகீர் சம்பவம்... 43 பேரின் நிலை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share